Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரத்தானை முன்னிட்டு அதிகாலை 3 மணி முதல் மெட்ரோ இரயில் சேவை!

Sinoj
வியாழன், 4 ஜனவரி 2024 (21:00 IST)
சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு வருகின்ற 06.01.2024 மெட்ரோ இரயில் சேவைகள் அதிகாலை 3 மணி முதல் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளதாவது:
 
''சென்னை மாரத்தான் ஓட்டம் வருகின்ற 06.01.2024 (சனிக்கிழமை) அன்று அதிகாலை 4 மணி முதல் நடைபெறுகிறது. இதனையொட்டி மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் மற்றும் அவர்களுக்கு இடையூறு அற்ற எளிமையான பயண அனுபவத்தை வழங்கும் வகையில், சென்னை மெட்ரோஇரயில் சேவைகள், வருகின்ற (06.01.2024) அன்று அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
 
மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை ரன்னர்ஸ் உடன் இணைந்து, மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சிறப்பு QR குறியீடு பதியப்பட்ட பயணஅட்டையை பயன்படுத்தி 06.01.2024 அன்று மட்டும் மெட்ரோ இரயிலில் எவ்வித கட்டணமும் இன்றி பயணம் செய்து கொள்ளலாம் மற்றும் இந்த QR குறியீடை பயன்படுத்தி பங்கேற்பாளர்களுக்கு அன்று மட்டும் வாகன நிறுத்துமிடத்தில் தங்களதுவாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம்.
 
வழக்கமான மெட்ரோ இரயில் சேவைகள் காலை 5.00 மணி முதல் இயக்கப்படும். மாரத்தான் பங்கேற்பாளர்கள் முழுமையாக இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு ''தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமர் புராண கதாப்பாத்திரமா? இந்துக்களை அவமதிக்கிறார் ராகுல்காந்தி! - பாஜக கண்டனம்!

அமெரிக்காவுக்கு வெளியே படம் எடுத்தால் 100 சதவீதம் வரி! - ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஹாலிவுட்!

ஐபிஎல் பார்த்தேன்! வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார்! - புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

திமுக பொதுக் கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பித்த ஆ ராசா..!

அடுத்த கட்டுரையில்
Show comments