Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் களம் இறங்கும் எம்.ஜி.ஆர் பேரன்! – அதிமுகவில் விருப்பமனு!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (13:02 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் நேர்காணல் நடந்து வரும் நிலையில் தேர்தலில் போட்டியிட எம்.ஜி.ஆர் பேரன் விருப்ப மனு அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக விருப்ப மனு அளிக்க கடைசி தேதி மார்ச் 5 என அறிவித்திருந்த நிலையில் அதை மார்ச் 3 ஆக குறைத்தது. இந்நிலையில் நேற்றுடன் மனு அளித்தல் முடிவடைந்த நிலையில் சுமார் 6800 பேர் விருப்ப மனு அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அண்ணன் வழி பேரனான வி.ராமச்சந்திரன் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். ஆலந்தூர், பல்லாவரம் மற்றும் எம்.ஜி.ஆர் படுக்கையில் இருந்த படியே வெற்றி பெற்ற ஆண்டிபட்டி ஆகிய தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்துள்ள அவர் நேர்காணலிலும் கலந்து கொண்டுள்ளார். அவர் தேர்தலில் நின்றால் எம்ஜிஆர் பேரன் என்ற பிண்ணனி அவரது வெற்றிக்கு பக்கபலமாக இருக்கும் என பேசிக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாவர்க்கர் குறித்து பொறுப்பற்ற பேச்சு: ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

திருமணம் செய்த பெண் ஒருவர்.. முதலிரவுக்கு வந்த பெண் இன்னொருவர்.. மாப்பிள்ளை அதிர்ச்சி..!

வான்வழியை மூடிய பாகிஸ்தான்: பயணிகளுக்கு இண்டிகோ, ஏர் இந்தியா முக்கிய அறிவிப்பு..!

துணை வேந்தர்களுக்கு நள்ளிரவில் மிரட்டல்.. ஆளுனர் ரவி குற்றச்சாட்டு..!

தமிழகத்தில் இருக்கும் 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படுவது எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments