Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடிசியா வளாகத்தில் நடைபெற்று வரும் இராணுவ தளவாட கண்காட்சி...

J.Durai
புதன், 29 மே 2024 (10:39 IST)
கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள அரங்கில் இந்திய ராணுவ தளவாட கண்காட்சி நடைபெற்று வருகிறது. 
 
இந்த கண்காட்சியில் இந்திய ராணுவத்தில் உள்ள பல்வேறு பாதுகாப்பு பொருட்கள், மற்றும் போர்க்கருவிகளான படகுகள், பீரங்கிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் துப்பாக்கிகள், வெடி குண்டுகள், ராணுவ உடைகள் உட்பட பல்வேறு மாதிரிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 
 
அதுமட்டுமின்றி இங்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளின் அரங்குகளும் அமைக்கப்பட்டு நவீன கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 
 
மேலும் இங்கு வரும் பொதுமக்கள் இந்த மாதிரி கருவிகளை எவ்வாறு கையாளுவது அதன் பயன்பாடுகள் என்னவென்று கற்று தரப்படுகின்றன. 
மேலும் போர் ஒத்திகைகளும் பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கப்படுகிறது. 
 
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சிக்கு பொது மக்களுக்கு அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments