Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதை புண்ணாக்கி கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில்!

காதை புண்ணாக்கி கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில்!

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2017 (10:02 IST)
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னையில் தனியார் காது மூக்கு தொண்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 
 
சமீப காலமாக பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களை கூறி வரும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்க்கரை நோய் மற்றும் காது புண் காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் காது மூக்கு தொண்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.
 
அமைச்சருக்கு சர்க்கரை நோய் இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அச்சப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என கூறப்படுகிறது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காதில் மருந்து போட்டு 2 மணி நேரம் மருத்துவமனையிலேயே ஓய்வெடுக்க சொல்லியிருக்கிறார்கள்.
 
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பட்ஸ் வைத்து தனது காதை சுத்தப்படுத்தியபோது காதில் புண்ணாகிவிட்டதாம். இதனால் தான் அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றதாக அவரது வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரக்கை தண்ணீர் கலக்காமல் அடிப்பதாக சவால்! பாட்டில் பாட்டிலாக குடித்த இளைஞர் பரிதாப பலி!

தென்மேற்கு பருவமழை தொடங்குவது எப்போது? தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்..!

சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு ஒரு கண்துடைப்பு நாடகம்: திருமாவளவன்

மதுரையில் ரோடு ஷோ நடத்தினால் நடவடிக்கை! விமானத்தை திருப்பும் விஜய்?

தமிழகத்திற்கு ரூ.2,999 கோடியை விடுவித்தது மத்திய அரசு.. ஆர்ப்பாட்டத்திற்கு கிடைத்த பலன்?

அடுத்த கட்டுரையில்
Show comments