Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜகவை கழட்டி விடுகிறதா அதிமுக? ஆட்டுன மாவையே ஆட்டிய ஜெயகுமார்

Advertiesment
BJP TamilNadu
, புதன், 22 ஜனவரி 2020 (12:13 IST)
அமைச்சர் பாஸ்கரன்  தெரிவித்துள்ளது கட்சியின் கருத்து இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். 
 
கடந்த மக்களைவை தேர்தலில் கூட்டணி அமைத்த பாஜக – அதிமுக தொடர்ந்து இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் முதற்கொண்டு தங்களது கூட்டணியை தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
 
இந்நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அதிமுக அமைச்சர் பாஸ்கரன் தமிழக அமைச்சரவையிலேயே பலர் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜகவை விட்டு பிரிய நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என பேசியுள்ளார்.
BJP TamilNadu
அமைச்சரது இந்த பேச்சு அதிமுக மற்றும் பாஜக கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் ஜெயகுமார் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். ஜெயகுமார் கூறியதாவது, பாஜக கூட்டணில் இருந்து அதிமுக வெளியேறுவதற்கு தக்க நேரம்  பார்த்து கார்த்திருக்கிறது என அமைச்சர் பாஸ்கரன்  கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம், இது கட்சியின் கருத்தோ முடிவோ அல்ல என தெரிவித்துள்ளார். 
 
இது கட்சியின் கருத்து அல்ல தனிப்பட்ட நபரின் கருத்து என்பது அமைச்சர் ஜெயகுமாரின் எஸ்கேப்பிங் ஸ்டேட்மெண்டாக மாறியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிக்டாக் தோழியுடன் எஸ்கேப் ஆன கணவர்: மனைவி போலீஸில் புகார்!