Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதியின் நெக்ஸ்ட் மூவ் என்ன?? பொலிடிக்கல் டிராமாவை போட்டுடைத்த அமைச்சர்!!

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (12:34 IST)
உதயநிதியை கட்சிக்குள் முன்னிலைப்படுத்தவே அரசுக்கு எதிராக போராட்டங்கள் என அமைச்சர் ஜெயகுமார் பேசியுள்ளார். 
 
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் 100 இடங்களுக்கு தகுதி பெற்றோர் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களாக இருந்தது சர்ச்சையானது. 
 
இது குறித்து நடைபெற்ற விசாரணையில் தேர்வர்கள் முறைகேடான வழியில் தேர்ச்சி பெற இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்ததாகவும், மேலும் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களை தேர்வு செய்ய சொல்லியும் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 
மேலும் சில மணி நேரங்களிலேயே அழிந்துவிடும் விசேஷ பேனாவை கொண்டு விடைகளை குறித்தது மட்டும் அல்லாமல், அந்த மையங்களில் பணியில் இருந்த நபர்களுடன் இணைந்து இடைத்தரகர்களும் சரியான பதிலை குறித்து மற்ற தாள்களுடன் இணைத்துள்ளனர். 
 
இதனை தொடர்ந்து மோசடி சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களையும் இனி ஆயுளுக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தடை தேர்வு ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் இது தொடர்பாக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின்.  
சென்னை மெரினாவில், பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றிருப்பதைக் கண்டித்து, டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தார்.  
 
அதன் படி இன்று இந்த போராட்டமும் நடைபெற்றது. இது குறித்து அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது, உதயநிதி ஸ்டாலினை கட்சிக்குள் முன்னிலைப்படுத்துவதற்காகவே டி.என்.பி.எஸ்.சி.யைக் கண்டித்து திமுக இளைஞர் அணி அணி போராட்டம் நடத்துகிறது என தெரிவித்துள்ளார். 
 
ஜெயகுமார் கூறுவது போல அடுத்து மேயர் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வைக்க இப்போதே தலைமை தனிப்போராட்டங்களை கையில் எடுக்க சொல்லி ஆயத்தப்படுத்தி வருகிறதா என சந்தேகம் எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments