Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பாஜக அரசை கடுமையான விமர்சித்த அமைச்சர் மனோ தங்கராஜ்

MANO THANGARAJ
, வியாழன், 30 நவம்பர் 2023 (21:09 IST)
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் பாஜகவை வீழ்த்த கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டணி வியூகத்துடன், பாஜகவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில், தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் தன் வலைதள பக்கத்தில்,

''ஆகஸ்ட் 2023 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட CAG அறிக்கைகள், ஒன்றிய அரசின் துறைகளில் நடைபெற்ற ஊழல் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டி 7.5 லட்சம் கோடி முறைகேடுகளை அம்பலப்படுத்தியது. அரசு நிர்வாகத்தை பொறுப்புடன் பதில் சொல்ல வைக்கும் ஒரே அதிகார அமைப்பான CAG அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அறிக்கை தயாரித்த மூன்று உயர் அலுவலர்களை இடமாற்றம் செய்ததன் மூலம் மோடி அரசின் ஊழல் மற்றும் வெளிப்படைத் தன்மை குறித்த நிலைப்பாடு மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகியுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவிய விஜய் மக்கள் இயக்கம்