Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்ன புள்ளத்தனமாவே இருக்கியேப்பா! – ஸ்டாலினை கலாய்த்த ஓ.எஸ்.மணியன்

Webdunia
சனி, 29 ஜூன் 2019 (13:26 IST)
தி.மு.க தலைவர் ஸ்டாலின் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டு, பிறகு அதை வாபஸ் பெற்றதை அதிமுக அமைச்சர் கிண்டலடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் சட்டபேரவை சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டார். பிறகு தற்போதைய சூழலில் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என கைவிட்டார்.

நாகப்பட்டினத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் “ஸ்டாலின் ஒரு விளையாட்டு பிள்ளை. எதை எப்போது, எப்படி செய்ய வேண்டுமென்று அவருக்கு தெரியாது” என கூறியுள்ளார்.

மேலும் தங்க.தமிழ்செல்வன் திமுகவில் இணைந்தது குறித்து பேசிய மணியன் “திருவிழாவில் திசைமாறி போன பிள்ளைகள் திரும்பி வர வெட்கப்பட்டு திமுகவில் ஒதுங்கியுள்ளன” என பேசியுள்ளார்.

தமிழகத்தின் மிகப்பெரும் கட்சியின் தலைவரை சின்ன பிள்ளை என்று பாவித்து பேசியிருப்பது திமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments