Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாற்றப்படுகிறது கல்லூரி பாடத்திட்டங்கள்.. புதிய திட்டம் என்ன? – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (13:13 IST)
தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் பல பல்கலைக்கழகங்களும், அதன் கீழ் பல கலை அறிவியல் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இவை தவிர்த்து தன்னாட்சி பெற்ற பல்கலைகழகங்களும் செயல்பட்டு வருகின்றன. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின் ஏராளமான மாணவர்கள் அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்பித்திருந்தனர்.

மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அனைத்து அரசு கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் விரைவில் மாற்றியமைக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப, துறை சார் வளர்ச்சிகளை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் தனித்திறமையை வளர்த்துக் கொள்ளும் விதமாக பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு துணையாக நிற்கும்: முதல்வர் ஸ்டாலின்

இனி பயங்கரவாதிகளால் தப்ப முடியாது! - இந்தியா தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆதரவு!

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக சரிவு.. ஆனாலும் ஒரு ஆறுதல்..!

போர் பதட்டம் இருந்தும் தங்கம் விலை இன்று சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

காஷ்மீர் விமான நிலையம் ராணுவ கட்டுப்பாட்டில்..! 5 விமான நிலையங்கள் மூடல்! - அடுத்தடுத்த அதிரடி!

அடுத்த கட்டுரையில்
Show comments