Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலை ஆளுநரா...? ஆர்.என்.ரவி ஆளுநரா..? அமைச்சர் ரகுபதி ஆவேசம்..!

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (08:03 IST)
தமிழகத்தில் ரவி ஆளுநரா அல்லது அண்ணாமலை ஆளுநரா என்று சந்தேகமாக இருக்கிறது என அமைச்சர் ரகுபதி ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார். 
 
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடை மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில் அந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார் 
 
இந்த மசோதாவில் உள்ள சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு விளக்கம் கேட்டு அவர் திருப்பி அனுப்பி உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் சட்ட அமைச்சர் ரகுபதி நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது ஆளுநர் கேட்ட விளக்கம் அனைத்திற்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது என்றும் ஆனாலும் அவர் திருப்பி அனுப்பி உள்ளார் என்றும் தெரிவித்தார் 
 
மேலும் ஆளுநர் என்னென்ன விளக்கம் கேட்டார் என்பதை எல்லாம் அண்ணாமலை கூறியதை பார்க்கும்போது இந்த மசோதா குறித்து இருவரும் விவாதம் செய்தார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் ஆர்என் ரவி ஆளுநரா அல்லது அண்ணாமலை ஆளுநரா  என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஆன்லைன் தடை செய்தால் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐடி கார்டு வாங்கி இந்து என உறுதி செய்த பின்னரே சுட்டார்கள்.. காஷ்மீர் தாக்குதலில் அதிர்ச்சி தகவல்..!

காஷ்மீர் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. 20 பேர் பலி.. மோடி-அமித்ஷா அவசர ஆலோசனை..!

LICக்கு திடீரென கிடைத்த ஜாக்பாட்.. ஒரே பங்கில் கோடிக்கணக்கில் லாபம்..!

மறைந்த போப் உடல்.. முதல்முறையாக வெளியிட்ட வாடிகன் நிர்வாகம்..!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. எத்தனை ஆயிரம்? அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments