ரஜினியுடன் கூட்டணி வைத்தால் கமல் வேறு நாட்டிற்கு தான் செல்ல வேண்டும் என ராஜேந்திர பாலாஜி சொல்லாமல் சொல்லியுள்ளார்.
தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும் என்பது இல்லை. பேச்சுவார்த்தையில் எப்படி உடன்பாடு எட்டப்படுகிறதோ அதை பொறுத்து கூட்டணி அமையும். ரஜினியுடன் கூட்டணி அமைக்க பேச்சு நடத்த வாய்ப்பு இருக்கிறது என கமல் தெரிவித்துள்ளார்.
ரஜினி, கமல் இருவரும் அரசியலில் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், தமிழக அமைச்சர் ஜெயக்குமார், ரஜினி கமல் இருவரும் இணைந்தாலும் , அவர்களின் கூட்டணி குறித்து திமுகதான் கவலைபபட வேண்டும். அதிமுகவின் வாக்கு வங்கியை ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக அல்லது திமுகவுடன் கூட்டணி இல்லை எனில் கமல் வேறு நாட்டிற்கு தான் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார். அதாவது ரஜினியுடன் கூட்டணி வைப்பது கமலுக்கு வெற்றி கொடுக்காது என தெரிவித்துள்ளாரா என சந்தேகம் எழுந்துள்ளது.