Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”அது போன மாசம், இது இந்த மாசம்”…வேலூர் தொகுதி குறித்து ராஜேந்திர பாலாஜி

Webdunia
திங்கள், 22 ஜூலை 2019 (11:50 IST)
வேலூர் தொகுதி சென்ற மாதம் தான் திமுகவின் கோட்டையாக இருந்தது எனவும், தற்போது இல்லை எனவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

சிவகாசியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விழா முடிந்ததும் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது வேலூரில் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலை குறித்து கேள்வி எழுப்பியபோது, வேலூர் தொகுதி திமுகவின் கோட்டை என்று பலர் கூறிவருகிறார்கள், ஆனால் அது போன மாதம் தான். இப்போது வேலூர் தொகுதி அதிமுக-வின் கோட்டையாக உள்ளது. அதுவும் உறுதியான எக்கு கோட்டையாக உள்ளது எனவும் கூறியுள்ளார். மேலும் வேலூர் தேர்தலில் அதிமுக–விற்கான வெற்றி வாய்ப்பு வலுவாக உள்ளது எனவும், இனிமேல் திமுக எந்த தேர்தலிலும் போட்டியிடத் தயங்கும் அளவிற்கு வேலூர் தேர்தலில் அதிமுக-வின்  வெற்றி அமையவுள்ளது எனவும் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments