Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதியால் கூட அது முடியாது: அமைச்சர் செல்லூர் ராஜூ அசால்ட்!

கருணாநிதியால் கூட அது முடியாது: அமைச்சர் செல்லூர் ராஜூ அசால்ட்!

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2017 (12:10 IST)
தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று வரும் தமிழக அரசுக்கு போதிய எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததால் விரைவில் ஆட்சி கவிழும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். இதற்கு அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.


 
 
சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக ஆட்சி நீடித்து நிலைக்க வாய்ப்பில்லை என கருத்து தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் பணிகளைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.
 
ஸ்டாலின் நகைச்சுவை நடிகர் போல் பேசி வருகிறார், விரைவில் ஆட்சி கலையும் என்று அவர் கூறுவது பலிக்காது என தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ. அதிமுக ஆட்சி நிலைக்கும், தமிழக அரசை எந்தக் கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளதை குறிப்பிட்டார்.
 
மேலும் திமுக தலைவர் கருணாநிதியால் கூட அதிமுக அரசை அசைக்க முடியாது. நிலைமை இப்படி இருக்க ஸ்டாலினால் எப்படி முடியும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது போன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல: எடப்பாடி பழனிசாமி

நானாக கூட்டணி மாறவில்லை, எனது கட்சி தான் என்னை மாற வைத்தது: நிதிஷ்குமார்

பிஸினஸ்மேன் போல வந்து ரூ.23 கோடி வைரம் கொள்ளை! சென்னையில் ஒரு சதுரங்க வேட்டை? - என்ன நடந்தது?

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்ற இருவர்? - பஞ்சாபில் அதிர்ச்சி!!

நடந்து செல்லும் பக்தர்களுக்கு அலிபிரி வரை இலவச பஸ்கள்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments