Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவருக்கு வேற வேல என்ன? ஸ்டாலினை நக்கலடிக்கும் அமைச்சர்!

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (11:02 IST)
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மாற்றப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் அடித்துள்ளார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
 
தமிழக மாநில தேர்தல் ஆணைய செயலாளர் நேற்று மாற்றப்பட்டார். இதற்கு ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் திரு.பழனிச்சாமி அவர்களை, திடீரென்று மாற்றியிருப்பது கண்டனத்திற்குரியது என தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார். 
 
அதோடு, உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தல் பணிகளைச் செய்து கொண்டிருந்தவரை மாற்றியது ஏன்? விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விசுவாசமாகப் பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர், மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா?  இது, உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடவா? அல்லது உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினர் ஒட்டுமொத்தமாகத் தில்லுமுல்லுகளில் ஈடுபடுத்தவா? என கேள்வியும் எழுப்பியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து இதற்கு அதிமுக சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இடமாற்றம் செய்யப்பட்டது, வழக்கமான நடைமுறைதான்.  இதற்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிப்பது வாடிக்கைதான் என தெரிவித்தார். 
 
இதன் பின்னர் ஐஐசி மாணவி பார்த்திமா மரணம் குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர், ஐஐடி மாணவி விஷயத்தைப் பொருத்தவரையில் முழுமையான விசாரணை நடைபெறும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 
எந்த இடத்தில் சர்ச்சைகள் இருந்தாலும் அவற்றின் வரலாற்றை தேடிப்பிடித்து உரிய நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் இதற்கு, முரசொலி விவகாரமும் விதிவிலக்கல்ல என்று பதில் அளித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments