Publish Date: Mon, 20 Jul 2026 (14:15 IST)
Updated Date: Mon, 20 Jul 2026 (14:18 IST)
தமிழகத்தில் தற்போது அதிமுகவும் இல்லாமல், திமுகவும் இல்லாமல் தவெக ஆட்சிக்கு வந்திருக்கிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியடைந்ததையும், குறிப்பாக அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோல்வி அடைந்ததையும் அக்கட்சியினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எனவே தொடர்ந்து தவெக ஆட்சியையும், முதல்வர் விஜயையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். ஏற்கனவே முதல்வர் விஜயை மிகவும் அவதூறாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் மற்றும் இந்நாள் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் வெளியே வந்தார்..
அதேபோல், கோவில்பட்டியில் நேற்று நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் மானங்கெட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சரே.. உன்னை சட்டமன்றத்தில் வைத்து பார்த்துக் கொள்கிறோம்.. எங்களை என்ன கோமாளி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?.. சட்டமன்றத்தை பூட்டுவோம் என கூறுகிறாய்.. அதை நீ செய்தால் எலும்புகள் இருக்காது.. எலும்புகளை உடைத்து அனுப்பி விடுவோம் என்று முதல்வரை விஜயை ஒருமையில் பேசினார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார்..
இந்நிலையில், செய்தியாளர்களிடம் இதுபற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் வன்னியரசு எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.. தோல்வியின் விரக்தியில் திமுகவினர் இவ்வாறு அநாகரிகமாக பேசி வருகிறார்கள் என அவர் கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க