Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களை தேடி மருத்துவம் இந்தியாவிற்கே முன்னோடி.. ஸ்டாலின் பெருமிதம்!

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (10:23 IST)
இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என ஸ்டாலின் பேச்சு. 

 
தமிழகத்தின் முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் மக்கள் நல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
அந்த வகையில் மக்களை தேடி வரும் மருத்துவம் என்ற புதிய திட்டம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி (இன்று) முதல்வரால் தொடங்கி வைக்கப்படும் என ஏற்கனவே சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று முதல்வர் ஸ்டாலின் இதனை துவங்கி வைத்தார். 
 
இதன் பின்னர் முக ஸ்டாலின் பேசியதாவது, இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவத்தை தேடி மக்கள் செல்லும் சூழலை மாற்ற புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. கொரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர் என அவர்களை பாராட்டினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments