Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனது மனைவி போகாத கோயில்களே இல்லை: பொங்கல் விழாவில் முக ஸ்டாலின் பேச்சு!

Webdunia
வியாழன், 14 ஜனவரி 2021 (20:19 IST)
என் மனைவி போகாத கோவில்கள் இல்லை என்றும் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என பாஜக வீண் பழி சுமத்துவது மக்களிடம் எடுபடாது என்றும் சமத்துவ பொங்கல் விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் பேசியுள்ளார் 
 
திமுக குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்படும் ஒன்று திமுக இந்து விரோதி  கட்சி என்பதுதான். இது குறித்து அவ்வப்போது திமுக தலைவர்கள் விளக்கம் அளித்த நிலையில் இன்று சமத்துவ பொங்கல் விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசினார் 
 
இதில் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை என்றும் இதனை புரியாமல் பாஜக ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறது என்றும் இதற்கு உதாரணமாக எனது மனைவி போகாத கோவில்கள் இல்லை என்றும் அவர் கூறினார் 
 
திமுக இந்துக்களுக்கு எதிரி என்ற பாஜகவின் வீண்பழி மக்களிடம் எடுபடாது என்றும் திமுக மீது ஒரு சிலர் வேண்டுமென்றே இதுபோன்ற பழிகளை சுமத்தி வருகின்றனர் என்றும் ஸ்டாலின் கூறினார். இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இந்துக்களை அவரது பேச்சு ஆறுதல்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments