Daily Horoscope

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சட்டம், ஒழுங்கு ICU-வில்!.. ஆட்சி நிர்வாகம் கோமாவில்! - ஸ்டாலின் அட்டாக்..

Advertiesment
vijay stalin
கடந்த 8ம் தேதி அதாவது தீபாவளியன்று தமிழகத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். அதில், காவல்துறை அதிகாரியும் ஒருவர். மற்றவர்களில் பெரும்பாலானோர் பழிவாங்கல் காரணமாக வெட்டிகொலை செய்யப்பட்ட ரவுடிகள். ஒருபக்கம், தன்னை சந்திக்கவந்த ஒருவரை துணை சபாநாயகர் ரவிசங்கர் மிரட்டி, தாக்கியதாக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோல், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட கலெக்டர் பத்மஜாவுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாகவும், கலெக்டரின் வீட்டிற்கே சென்று தகாத முறையில் பேசியதாகவும் திமுக எம்.பி.கனிமொழி பரபரப்பு குற்றம் சாட்டினார். ஆனால், அந்த புகாரை அருள் விக்னேஷ் மறுத்துள்ளார். தவெக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவரும் நிலையில் நாளை தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை விஜய் கூட்டியிருக்கிறார்.

இந்நிலையில், திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதாவது:

ஒரே நாளில் 17 கொலைகள்!.. குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு!...
பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக TVK MLA மீது குற்றச்சாட்டு!
இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில் குற்றவாளிகளுக்குப் பயமில்லை!
காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை! த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை!

மொத்தத்தில், Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் திரு. விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை’ என பதிவிட்டிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் பண்ணது தப்புதான்.. இணைந்து பணியாற்ற தயார்!.. இறங்கி வந்த டிரம்ப்...