Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரைமறைவில் ஓகே சொல்லிட்டாரா எடப்பாடி? – மு.க.ஸ்டாலின் சந்தேகம்

Webdunia
புதன், 4 மார்ச் 2020 (12:17 IST)
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களை மத்திய தொல்லியல் துறை அபகரிக்க முயற்சிப்பதாக மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் மத்திய கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மத்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள நினைவு சின்னங்கள் அடங்கிய பட்டியலை சரிபார்க்கப் போவதாகவும், புதிய வரலாற்று சின்னங்களை அதில் இணைக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல புராதான சின்னங்கள் பராமரிக்கப்படாமல் கிடக்கிறது. இந்நிலையில் முறையாக இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கோவில்களையும், புராதான சின்னங்களையும் கைப்பற்ற மத்திய அரசு திட்டமிடுகிறது. இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் பாண்டியராஜனும் அமைதி காப்பது, திரைமறைவில் அவர்கள் சம்மதம் தெரிவித்து விட்டார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments