Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடியேற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி! – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!

Webdunia
ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (09:33 IST)
இன்று சுதந்திர தின விழாவில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 75வது சுதந்திரதினம் இன்று நாட்டு மக்களால் விமரிசியாக கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள காரணத்தால் பொதுமக்கள் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அப்போது பேசிய அவர் “இந்த ஆண்டில் பாரதியாரின் நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட உள்ளது. சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் தினம் இது. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிக்கு அரசு சார்பில் விழா எடுக்க திட்டம் உள்ளது. மாநிலம் முழுவதும் சுதந்திர தின விழாவில் முதல்வர்கள் கொடி ஏற்ற உரிமையை பெற்று தந்தவர் கலைஞர் கருணாநிதி. இந்த சுதந்திர தின விழாவில் முதல்வராக தேசிய கொடியை ஏற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு என் நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன பண்ணாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது..? - பாகிஸ்தான் மீது சேவாக் கடும் விமர்சனம்!

தயவு செஞ்சு ரிட்டயர்ட் ஆகாதீங்க.. நீங்கதான் இப்போ தேவை! - கோலிக்கு அம்பத்தி ராயுடு வேண்டுகோள்!

மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்..! காண ஓடி வந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!

ஒத்தி வைக்கப்பட்ட சிஏ தேர்வுகள் எப்போது? புதிய தேதி அறிவிப்பு..

சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால் பதிலடி.. ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: விக்ரம் மிஸ்ரி..

அடுத்த கட்டுரையில்
Show comments