Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடங்கள் நடத்த ஆன்லைன் வகுப்புகள் சரியான தீர்வா?

Webdunia
புதன், 17 ஜூன் 2020 (14:41 IST)
தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் பாடங்களை ஆன்லைன் மூலம் நடத்த பல கல்வி நிறுவனங்களும் திட்டமிட்டு வருகின்றன. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் முழுமையான தீர்வாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து வருவதால் கடந்த சில மாதங்களாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வரும் நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த பள்ளிகள் அனுமதி கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 60 சதவீதம் பேர் கிராமப்பகுதிகளை சேர்ந்தவர்கள். இணைய வழிக் கல்விக்கு தேவையான ஸ்மார்ட்போன், மடிக்கணினி, இணைய வசதி போன்ற தொழில்நுட்ப வசதிகள் கிராமப்பகுதிகளில் அதிகமாக கிடையாது. இதனால் இணையவழி கல்வி நடத்துவது இயலாத காரியம்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் பல அரசியல் தலைவர்களும் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளனர். கேரளாவில் மாணவி ஒருவர் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

கிராமப்புறத்தில் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகள் குறைவு என்பது ஒருபுறமிருக்க, இதுநாள்வரை பள்ளி வகுப்பறையில் கூட்டமாக அமர்ந்து விவாதித்து படித்த மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தனியறையில் அமர்ந்து படிப்பது கற்றல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துமா என்றும் கேள்வியெழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments