Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனிமே கூட்டணி வேண்டுமா?.. வேண்டாமா?!.. முக ஸ்டாலின் சொல்வது என்ன?....

Advertiesment
stalin
கடந்த பல வருடங்களாகவே திமுக கூட்டனியில் விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் திமுக கூட்டணியில் தொடர்ந்து இடம் பிடித்து வந்தன. 2026 சட்டமன்ற தேர்தலிலும் இந்த கட்சிகள் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன.

இதில் மதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட திமுக தலைமை வலியுறுத்தியது. நடந்து முடிந்த தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. அதோடு திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளின் ஆதரவை பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை இந்த கட்சிகளெல்லாம் திமுக கூட்டணியில் இருந்தாலும் அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தது இல்லை. ஆனால் தமிழக முதல்வர் விஜய் தங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைத்து கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுத்து விட்டார்
. ஒருபக்கம் ஏற்கனவே திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறிவிட்ட நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் சமீபத்தில் வெளியேறியது.

அதேபோல் மதிமுக விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில்தான், இன்று ஒரு விழாவில் பேசிய ஆ.ராசா ‘இனிமேல் கூட்டணி இல்லை என்று மற்றவர்கள் சொல்ல தொடங்கி விட்டார்கள்.. எனவே, இனிமே தனித்து போட்டி என அறிவியுங்கள் தலைவரே’ என்று முக ஸ்டாலிடம் கோரிக்கை வைத்தார்.

அதன்பின் பேசிய முக ஸ்டாலின் ‘ராசா பேசும்போது கூட்டணி பற்றி சொன்னார். கலைஞர் கூட்டணி அமைத்தால் அந்த கூட்டணியை பாதுகாப்பாக வைத்திருப்பார்.. அவர்களாக விலகிச் சென்றாலே தவிர கலைஞர் அவர்களை விட்டது கிடையாது.. அவர் வழியில்தான் நானும்.. ஆனால் இன்று இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் கூட்டணியே தேவையில்லை என்றுதான் சொல்கிறார்கள்.  நிச்சயம் அதையும் நாங்கள் விரைவில் பரிசீலிப்போம்’ என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி கூட்டணியே வேண்டாம்.. 234 தொகுதியிலும் உதயசூரியன் தான் போட்டி.. தலைவர் முக ஸ்டாலின் அறிவியுங்கள்: ஆ ராசா