Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்க 37 எம்பிக்களும் ஜடம் இல்லை: மு.க.ஸ்டாலின் ஆவேசம்

Webdunia
செவ்வாய், 11 ஜூன் 2019 (09:38 IST)
கடந்த முறை அதிமுகவின் 38 எம்பிக்கள் பாராளுமன்றத்தில் ஜடமாக இருந்தது போல் திமுகவின் 37 எம்பிக்கள் இருக்கமாட்டார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசியுள்ளார்.
 
நேற்று திருச்சியில் கலைஞர் அறிவாலயத்தில் கருணாநிதி மற்றும் அண்ணா சிலைகளை திறந்து வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 37 எம்பிக்களை வைத்து கொண்டு திமுக என்ன செய்ய போகிறது என்று சிலர் விமர்சனம் செய்கின்றனர். நாங்கள் ஒன்றும் கடந்த ஆட்சியில் இருந்த 38 அதிமுக எம்.எல்.ஏக்கள் போல் ஜடம் போல் இருக்க மாட்டோம். பாராளுமன்றம் கூடும்போது திமுக எம்பிக்கள் எப்படி செயல்படுவார்கள் என்பது தெரிய வரும்
 
37 தொகுதிகளில் திமுக பெற்ற வெற்றிக்கு நான் காரணமில்லை என்று ஒருசிலர் கூறி வருகின்றனர். அது உண்மைதான். இந்த வெற்றிக்கு நான் மட்டும் காரணமில்லை. ஒவ்வொரு திமுக தொண்டனின் உழைப்பு தான் இந்த வெற்றிக்கு காரணம்
 
காவிரி விஷயத்தில் அக்கறை செலுத்தாத முதல்வர் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு மட்டும் கூடுதல் அக்கறை செலுத்துகிறார். ஏனெனில் எட்டு வழிச்சாலை திட்டத்தால் அவருக்கு ரூ.3000 கோடி கிடைக்கும் என்பதால்தான். 
 
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

தமிழகத்தை போலவே ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பேருந்து: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அமைச்சரின் வருகையின் போது GOBACK சொன்ன திமுக நிர்வாகிகள்.. திமுக தலைமை நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments