Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்மொழி கொள்கையை எதிர்த்ததற்கு நன்றி! – முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் ட்வீட்!

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (11:40 IST)
மும்மொழி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் மொத்தமாக கல்வி கொள்கையையும் எதிர்க்க வேண்டும் என முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதில் பேசிய அவர் “மத்திய அரசு மும்மொழி கொள்கையை புதிய கல்வி திட்டத்தின் மூலம் கொண்டு வருவது வேதனையளிக்கிறது. தமிழகத்தில் மும்மொழி கொள்கையை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது. தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும்” என உறுதியாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக அரசின் இந்த முடிவு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின் “ புதிய கல்வி கொள்கை 2020 பெயரால் வரும் மும்மொழி திட்டத்தை எதிர்த்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

மேலும் “மொழிக்கொள்கை மட்டுமல்ல- கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம். அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்!” என கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments