Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசுத் தலைவரை சந்திக்க இருக்கும் ஸ்டாலின்? அன்பில் மகேஷ் தகவல்

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (13:02 IST)
நீட் விவகாரத்தில் விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவரை சந்தித்து பேசுவார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல். 

 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசு தாக்கல் செய்த நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் சட்டமன்ற சிறப்பு கூட்டம் கூடி நீட் விலக்கு மசோதாவை இயற்றி ஆளுநருக்கு அனுப்பி உள்ளது. 
 
இந்த மசோதாவிற்கு ஆளுநரின் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்தார். அப்போது ஆளுநரும் நீட் விலக்கு குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 
 
இந்நிலையில் நீட் விவகாரத்தில் விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவரை சந்தித்து பேசுவார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மேலும், நீட் விவகாரத்தில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புகிறோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments