Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயப்படாம எழுதுங்க.. படிச்சதுதான் வரும்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு வாழ்த்து!

Webdunia
ஞாயிறு, 12 மார்ச் 2023 (09:21 IST)
தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்க உள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு மாநில கல்விமுறை பள்ளிகளில் பயிலும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 (நாளை) முதல் தேர்வுகள் தொடங்குகின்றன. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்வுகள் தொடங்குகின்றன. இதற்கான தேர்வு வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தேர்வு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பொதுத்தேர்வை எதிர்கொள்ள உள்ள மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் “பொதுத்தேர்வை கண்டு எந்த ஒரு டென்சனும் தேவையில்லை. இது ஜஸ்ட் இன்னொரு தேர்வு அவ்வளவுதான். உங்களுக்கு தன்னம்பிக்கையும், மன உறுதியும்தான் தேவை. எந்த கேள்வியாக இருந்தாலும் நீங்கள் படித்ததில் இருந்துதான் வரும். எந்தவித தயக்கமும் இன்று தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள். தேர்வு உங்களை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்வதற்காகதான். உங்கள் வெற்றிக்காக பெற்றோர், ஆசிரியர்களை போல நானும் காத்திருக்கிறேன். முதலமைச்சராக மட்டுமல்ல உங்கள் குடும்பத்தில் ஒருவனாக… ஆல் தி பெஸ்ட்” என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவது எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு.

ஒரு லாரியில் கேஸ், ஒரு லாரியில் மண்ணெண்ணெய்! வேகமாக வந்து மோதிய அரசு பஸ்! - அதிர்ஷ்டவசமாக தப்பிய மக்கள்!

திருமணத்திற்கு பிறகும் தனித்தனி கட்டில்.. இந்தியாவில் அதிகரிக்கும் ஸ்லீப் டைவர்ஸ்!

எங்கும் கருணாநிதி பெயர்.. எழும்பூர் ரயில் நிலையத்திற்கும் வைக்க கோரிக்கை..!

தங்கத்தை விற்க ஏடிஎம் மிஷின்.. 30 நிமிடங்களில் வங்கி அக்கவுண்டில் பணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments