அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்த நிலையில் பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் கேரளா, தமிழக பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கணிக்கப்பட்ட நாளுக்கு முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று தென்மேற்கு பருவமழை அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் இனி கேரளா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், மும்பை உள்ளிட்ட அரபிக் கடலோர பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்கும்.
வங்கக்கடலில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றாலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edit by Prasanth.K