Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன் .. பழி தீர்த்த மாமனார்... கதறல் சம்பவம்

Webdunia
திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (14:00 IST)
கோவை மாவட்டத்தில் உள்ள இடையர்பாளையம் பகுதியில் வசித்துவந்தவர் ராஜேந்திரன். இவர் அப்பகுதியில் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த  ஒரு வருடத்துக்கு முன்பு கவுண்டம்பாளையம் சக்திநகரைச் சேர்ந்த தங்கமணி என்பவரின் மகளை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஷாலினி பிரசவத்துக்காக சமீபத்தில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் போதிய அளவு ரத்தம் இல்லாததால் சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க முடியாது என்று மருத்துவர்கள் தரப்பில் கூறிவிட்டதாக தெரிகிறது.இப்படியிருக்கு ராஜேந்திரன் சரிசர வேலைக்குச் செல்லாமல்  இருந்துள்ளார்.
 
இந்நிலையில் மருத்துவமனையில்  இருந்து திரும்பிய ஷாலினி, தன் சகோதரி வீட்டுக்குச் சென்றுள்ளார்.  அப்போது தன் வீட்டுக்கு வரும் படி, ராஜேந்திரன்  அவரை அழைத்துள்ளார். அதற்கு வேலைக்குச் செல்லாதவனுடன் என் மகளை அனுப்ப முடியாது என ஷாலினியின் தாய் மீனா கூறியுள்ளார்.
 
இதில் ஆத்த்திரமடைந்த ராஜேந்திரன் மாமியார் என்று கூட பார்க்காமல், அவரது கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். பின்னர் இதுகுறித்து தன் கணவர் தங்கமணியிடம் கூறியுள்ளார்.
 
அதில் ஆத்திரமடைந்த தங்கமணி, ராஜேந்திரனிடன் விசாரித்துள்ளார்.அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி சண்டையாஜ்கி உள்ளது. இதில் ராஜேந்திரனின் முதுகிலும் , வயிற்றிலும் கத்தியால் குத்தியுள்ளார் தங்கமணி. பின்னர், ராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக கோவை மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜேந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் தங்கமணியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments