Webdunia - Bharat's app for daily news and videos

Install App

#MeToo: சிக்கிய இசை கலைஞர்களை நீக்கிய அகாடமி

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (18:55 IST)
#MeToo விவகாரம் தற்போது கோலிவுட் சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பெண்கள் தங்களது வாழ்வில் நடந்த பாலியல் இன்னல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். 
 
இந்த ஹேஷ்டேக் மூலம் இயக்குனர்கள், நடிகர்கள், இசை கலைஞர்கள் ஆகிய பலர் சிக்கி வருகின்றனர். அந்த வகையில் இதில் சிக்கிய கர்நாடக இசை சங்கத்தின் முன்னணி இசைக்கலைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 
ஆம், இந்த புகாரில் சிக்கிய என்.ரவிகிரண், ஓ.எஸ்.தியாகராஜன், மன்னார்குடி ஈஸ்வரன், ஸ்ரீமுஷ்ணம் ராஜா ராவ், ஆர்.ரமேஷ் மற்றும் திருவாரூர் வைத்தியநாதன் ஆகியோர் மார்கழி மாதம் நடைபெற இருக்கும் இசைக்கச்சேரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 
 
இது குறித்து அந்த அகாடமி கூறியுள்ளது பின்வருமாறு, மீ டூ விவகாரத்தின் எதிரொலியால் இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளது.  சில சமயங்களில் மீ டூ தவிர்த்தும் பாலியல் புகார்கள் வந்துள்ளன. 
 
அவர்கள் குற்றவாளிகள் என்று கூறவில்லை. ஆனால் எங்கள் கச்சேரிகளில் யார் பங்கேற்க வேண்டும்? யார் பங்கேற்க வேண்டாம்? என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

அடுத்த கட்டுரையில்