தமிழகத்தில் பிரபலமான குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குலசேகரப்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் ஆண்டுதோறும் புரட்டாசியில் நடைபெறும் தசரா திருவிழா மாநிலம் முழுக்க பிரபலமானது. இந்த நாளில் பல பகுதிகளில் இருந்து மக்கள் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்து வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டு தசரா விழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு இன்று முதல் வருகிற 14ம் தேதி வரையிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் பக்தர்கள் பங்கேற்பின்றி வெள்ளிக்கிழமை இரவு கோவிலுக்கு முன்பாக எளிமையாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.