Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

’’என் பேச்சு வெட்டி ஒட்டப்பட்டுள்ளது…’’ ஆர்.ராசா விளக்கம்

’’என் பேச்சு வெட்டி ஒட்டப்பட்டுள்ளது…’’ ஆர்.ராசா விளக்கம்
, சனி, 27 மார்ச் 2021 (18:37 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன,.

இந்நிலையில் ஒவ்வொரு நாளும் அரசியலில் பரப்புரன் நகர்கிறது.ஒவ்வொரு கட்சியும் எதிர்கட்சிகளை விமர்சிப்பதும் அவர்கள் இவர்களை விமர்சிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளர் ஆ. ராசா முதல்வரை தாக்கிப் பேசினார். இது சர்ச்சையானது.

ஆ ராசாவின் இந்த பேச்சை கனிமொழி கண்டித்திருந்தார். அவரின் சமூகவலைதளப் பக்கத்தில் ‘அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு செய்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லோருமே மனதில் வைத்துக்கொண்டால் சமூகத்துக்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி’ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று திமுக தலைவர் ஸ்டாலின் திமுக பேச்சாளர்கள் அனைவரும் அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை மானதில் வைத்துப் பேச வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் ஆ.ராசாவின் பேச்சுக்கு எதிராக அதிமுகவின் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர்.

தற்போது ஆ.ராசா இதை மறுத்து இதுகுறித்து அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், என் பேச்சு வெட்டி ஒட்டப்பட்டுள்ள்து. நான் அப்படிப்பேசவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் வார்த்தைகள் வெட்டி ஒட்டப்பட்டுள்ளன… ஆ ராசா விளக்கம்!