Webdunia - Bharat's app for daily news and videos

Install App

களைகட்டிய பாக்கெட் சாரயம்; விறகு கட்டையால் வெளுத்த பெண்கள்! – நாகையில் அதிரடி சம்பவம்!

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (13:31 IST)
நாகப்பட்டிணத்தில் சட்டத்திற்கு புறம்பாக பாக்கெட் சாராயம் விற்ற கும்பலை கிராமத்து பெண்கள் விறகு கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்காலில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக பாக்கெட் சாராயங்களை கடத்தி வந்து நாகப்பட்டிண மாவட்ட எல்லை கிராமங்களில் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் நேற்று கீள்வெளூர் ஆனைமங்கலம் பகுதியில் இளைஞர்கள் சிலர் முறைகேடாக பாக்கெட் சாரயத்தை காரைக்காலில் இருந்து கடத்தி விற்று வருவது அந்த பகுதியில் உள்ள கிராமத்தினருக்கு தெரிய வந்துள்ளது. உடனடியாக விறகு கட்டைகளோடு விரைந்த அந்த கிராமத்து பெண்கள் சாராயம் விற்ற இளைஞர்களை அடித்து விரட்டியுள்ளனர்.

இதுகுறித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சாராயம் விற்ற நான்கு பேரை கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்தது. கொரோனாவால் வேலை இல்லாமல் உள்ள சில இளைஞர்கள் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்திக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: நேரில் ஆஜராக உத்தரவு..!

சென்னை வந்த விமானம் மீது விழுந்த லேசர் லைட்.. நிலைகுலைந்த விமானி.. அதிர்ச்சி தகவல்..!

வெள்ளத்தால் கரைந்த மொத்த உப்பு.. ஒரு கிலோ ரூ.145க்கு விற்பனை.. அண்டை நாட்டுக்கு கைகொடுத்த இந்தியா..!

இந்தியாவின் முதல் எதிரி பாகிஸ்தான் இல்லையாம்! எந்த நாடு தெரியுமா? - அமெரிக்க புலனாய்வு அமைப்பு ரிப்போர்ட்!

இன்று 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்..?

அடுத்த கட்டுரையில்
Show comments