Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அம்மாவ கேட்டாதான் அப்பா யாருன்னு தெரியும்!.. நயினார் நகேந்திரன் சர்ச்சை பேச்சு!...

Advertiesment
nainar
நயினர் நாகேந்திரன் ஏற்கனவே ஒருமுறை ‘முதலில் விஜயை திரிஷாவை விட்டு வர சொல்லுங்க’ என சர்ச்சையாக பேசினார். அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே அதற்காக மன்னிப்புகேட்டார். இந்நிலையில்தான், தற்போது மீண்டும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பற்றி அவர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர் ‘சட்டசபையில் அப்பாவை காணோம். அப்பாவை காணோம் என சொல்கிறார்கள். வீட்டுக்கு போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என தெரியும். இப்படிப்பட்டவர்களிடம்தான் தற்போது ஆட்சி இருக்கிறது’ என பேசியிருந்தார்.

இதையடுத்து முதமைச்சர் விஜயின் அம்மா பற்றி நயினார் நாகேந்திரன் மோசமாக பேசியிருப்பதாக சமூகவலைத்தளங்களில் பலரும் அவரை திட்டி வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதி விஜய் சாலை!. முதல்வருக்கு வேறமாறி நன்றி சொன்ன கிராம மக்கள்!...