முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கிய ஆயுள் கைதியாக இருக்கும் நளினி மற்றும் முருகன் ஆகிய இருவரும் வெளிநாட்டில் உள்ள தனது உறவினர்களுடன் பேச வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது
இந்த வழக்கின் விசாரணையின்போது வெளிநாட்டு உறவினர்களுடன் பேச அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாட்டில் உள்ள உறவினர்களிடம் கைதிகளை பேச அனுமதி இல்லை என்று தெரிவித்தார்
இதனை அடுத்து வெளிநாட்டிலுள்ள உறவினர்களுடன் ஒரு நாள் மட்டும் பேச அனுமதி அளிக்க அளிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் இதுகுறித்து மத்திய அரசு வரும் திங்கட்கிழமை பதில் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது