Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக, அதிமுக vs நாம் தமிழர்: டஃப் கொடுப்பாரா சீமான்?

Advertiesment
நாம் தமிழர்
, வியாழன், 26 செப்டம்பர் 2019 (10:07 IST)
விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்களை சீமான் அறிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் அடுத்த மாதம் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் வரவிருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை என அறிவித்திருந்தது.
 
இந்நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக, இடைத்தேர்தலில் களமிறங்கியுள்ளது. விக்கிரவாண்டி தொகுதிக்கான திமுக வேட்பாளராக நா.புகழேந்தி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுக சார்பாக விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
நாம் தமிழர்
அதன் படி விக்கிரவாண்டியில் எம்.ஆர்.முத்தமிழ்செல்வன் என்பவரும், நாங்குநேரியில் வெ.நாராயணன் என்பவரும் அதிமுக சார்பாக போட்டியிடுவார்கள் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
 
இதனை தொடர்ந்து தற்போது நாம் தமிழர் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் சமூக செயற்பாட்டாளரான கு கந்தசாமியும், நாங்குநேரியில் சா.ராஜநாராயணனும், புதுச்சேரி காமராஜர் நகரில் பிரவினா மதியழகன் போட்டியிட உள்ளார்கள் என அறிவித்துள்ளார். 
நாம் தமிழர்

கடந்த இடைத்தேர்தலில் வெற்றி விகிதத்தில் மூன்றாம் இடத்தை நாம் தமிழர் பெற்றது. ஆனால், இப்போது அமமுக மற்றும் மநீம போட்டியிடாத நிலையில் அந்த வாக்குகள் பிரியாமல் நாம் தமிழருக்கு வர வேண்டும் என களப்பணி ஆற்றுவார்கள் என தெரிகிறது. எனவே இம்முறை மூன்று தொகுதிகளில் மும்முனை போட்டி இருக்க கூடும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெக்னிக்கல் ஹால்ட், டெக்னிக்கல் பால்ட் ஆனது – ஊடகங்கள் மேல் விசாரணைக்கு உத்தரவிட்ட உள்துறை அமைச்சகம் !