Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக தேர்தல் ஒரு பெரிய பிரச்சனையே இல்லை: நடிகை நமீதா பேட்டி..!

Webdunia
திங்கள், 15 மே 2023 (13:18 IST)
கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்தது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை என்றும் மீண்டும் அதே மாநிலத்தில் விரைவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக நடிகை நமீதா தெரிவித்தார். 
 
சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தலில் பாஜக ஆட்சியை காங்கிரஸ் கட்சியிடம் பறிகொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை நமீதா பாரதிய ஜனதா கட்சியின் மட்டும்தான் ஒருங்கிணைந்த மக்களுக்கு தேவையான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது என்று கூறினார். 
 
தமிழகத்தில் அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்றது முதல் பாரதிய ஜனதா கட்சியை நன்கு வளர்ந்து வருகிறது என்றும் எங்கு பார்த்தாலும் பாரதிய ஜனதா கட்சி பெயர் தான் ஒலிக்கிறது என்றும் கூறினார். 
 
கர்நாடக தேர்தல் தோல்வி ஒரு பெரிய பிரச்சனை இல்லை என்றும் அடுத்த முறை வெற்றி பெறுவோம் என்றும் அது மட்டும் இன்றி வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பாரதிய ஜனதா தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று அவர் தெரிவித்தார். 
 
அண்ணாமலை மீது பிரதமர் மோடி மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார் என்றும் அவர் தமிழகத்தையும் ஆட்சியைப் பிடித்து காட்டுவார் என்றும் நமீதா தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் லாகூர் ‘லவ் நகர்’ ஆகும்.. கராச்சி ‘நியூ காசி’ ஆகும்: மார்க்கண்டேய கட்சு

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. பதுங்கு குழியில் ஜம்மு மக்கள்..!

நிதி கொடுத்து உதவுங்கள்.. உலக வங்கியிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு..!

அடுத்த அட்டாக் ஆரம்பமா? 26 போர்க்கப்பல்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தடுத்த இந்திய ராணுவம்.. வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments