Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் தலைவர்களின் சொத்து மதிப்பு!. உங்களுக்கெல்லாம் இதயமே இல்லையா?!..

Mahendran
செவ்வாய், 31 மார்ச் 2026 (17:12 IST)
சட்டசபை தேர்தல் வந்தாலே தமிழக அரசியல் தலைவர்கள் தங்களின் வேட்பு மனுவில் குறிப்பிடும் அவர்களின் சொத்து மதிப்பு கணக்குகள் சர்ச்சையைக் கிளப்பும், விவாதத்தை ஏற்படுத்தும், அதேநேரம் சிரிப்பையும் வரவழைக்கும்.. ஏனெனில் அவற்றில் சொல்லப்படுவது எதுவுமே உண்மை இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்..

அதேநேரம் அவர்களின் வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிகளும் ஏற்றுக் கொள்கிறார்கள்.. இதுதான் நடைமுறை.. அது இப்போது வரை மாறவில்லை.. அதிலும் தன்னிடம் இவ்வளவு பணம்தான் இருக்கிறது, என்னிடம் சொந்தக்கார் கூட இல்லை, சொந்த வீடு கூட இல்லை என பல வருடங்களாய் அரசியலில் இருப்பவர்கள் சொல்வது எப்பொழுதும் சூப்பர் காமெடிதான்..

அந்த வகையில் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது வேட்புமனவில் தன்னிடம் கைவசம் 10 ஆயிரம் பணம் மட்டுமே இருக்கிறது, சொந்தமாக கார் எதுவும் இல்லை, சொந்தமாக நகை எதுவும் இல்லை என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தன்னிடம் 7.18 கோடி மதிப்பிலான சொத்து மட்டுமே இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

அதேபோல் நாம் தமிழர் கட்சி சீமான் தன்னிடம் 39.81 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும், தன்னிடம் அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை எனவும், கைவசம் 50 ஆயிரம் பணம் மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். ஒருபக்கம் நடிகரும் தவெக தலைவருமான விஜய் இதுவரை எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் தன்னிடம் 624.52 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருக்கிறது எனவும், கைவசம் 2 லட்சம் பணம் மட்டுமே இருப்பதாகவும் கூறியிருக்கிறார்..



அதையெல்லாம் விட ஹைலைட்டாக தனது தனது அப்பா அம்மா, மனைவி, மகன், மகள் ஆகிய எல்லோருக்கும் கடன் கொடுத்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். இந்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்து ‘ஐயா.. உங்களுக்கெல்லாம் இதயமே இல்லையா?’ என கவுண்டமணி புகைப்படத்தை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள்..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் வாங்க வேண்டாம்!. மோடி போட்ட வீடியோவால் பங்கு சந்தையில் வீழ்ச்சி!...

நேபாள பேரிடர் எதிரொலி!.. பனிப்பாறைகளில் சென்சார் வைக்கும் பணி தீவிரம்..

UGC NET மறுதேர்வு தேதியை அறிவித்த தேசிய தேர்வு முகமை.. 3 பாடங்களுக்கு எப்போது தேர்வு...

மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினர் மகள் தூக்கில் தொங்கி தற்கொலை.. என்ன காரணம்?

உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு.. செப்டம்பர் 5 போராட்டத்தை வாபஸ் பெற்ற சிஜேபி...

அடுத்த கட்டுரையில்
Show comments