வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காலம் முடிந்து குளிர்காலமும் முடிந்து வெயில்காலம் தொடங்கி விட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் அரிதாக கடந்த மார்ச் மாதம் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி தமிழகம் நோக்கி வந்தது. இதனால் சில பகுதிகளில் மழைப்பொழிவு இருந்தது.
தற்போது மீண்டும் வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் கடலோரப்பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.