Publish Date: Wed, 10 Nov 2021 (10:51 IST)
Updated Date: Wed, 10 Nov 2021 (10:54 IST)
ஏற்கனவே வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைக் கொண்டுள்ள நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைக் கொண்டுள்ள நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் எதிர்வரும் 13ம் தேதி வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் அதனையொட்டிய தீவுகள் பகுதிகள் அருகே உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் என கூறப்பட்டுள்ளது.