Publish Date: Wed, 09 Jun 2021 (08:49 IST)
Updated Date: Wed, 09 Jun 2021 (08:53 IST)
தமிழக முதல்வரிடன் பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக வைக்கும் விதமாக தனி இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து ஒரு மாத காலம் முடிந்துள்ளது. இந்நிலையில் பல்வேறு நல திட்டங்கள் குறித்து அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும், தற்போது கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் கொரோனா தடுப்பு பணிகளில் அரசு முழுமையாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் முதல்வரின் தனிப்பிரிவு வாயிலாக பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக முதல்வரிடம் சொல்லும் வகையில் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. www.cmcell.tn.gov.in/register.php என்ற இந்த இணையதளம் வாயிலாக புகார் அளிக்கலாம் என்பதுடன், புகார் மீதான நடவடிக்கை நிலவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.