Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்படி என்ன பேசபோறாங்க? செயற்குழு கூட்டத்தில் போன்களுக்கு தடா...

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (09:26 IST)
மாறாக அதிமுக செயற்குழு கூட்டத்தில் செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. மேலும் கூட்டணி பேச்சு வார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
இந்நிலையில் அதிமுக செயற்குழு இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் கூட உள்ளது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்று செயற்குழு கூட்டம் கூடவுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்த செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதோடு வழக்கத்திற்கு மாறாக அதிமுக செயற்குழு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் உள்பட யாரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவில் பிரச்சனை ஏற்பட்டது என சர்ச்சை எழுந்த நிலையில் இம்முறை செல்போன் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

திமுக பொதுக் கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பித்த ஆ ராசா..!

திருந்துகிறதா பாகிஸ்தான்? இறந்த பயங்கரவாதிக்கு இறுதிச்சடங்கு செய்ய மதகுருக்கள் மறுப்பு..!

இந்து மதத்தில் இருந்து ராகுல் காந்தியை வெளியேற்றுகிறேன்: சங்கராச்சாரியார் அறிவிப்பால் பரபரப்பு..!

மேற்கு வங்கத்தில் குடியரசு தலைவர் ஆட்சி.. கவர்னர் பரிந்துரையால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments