Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெங்கு இல்லை ..வந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ரெடி - மருத்துவக்கல்லூரி முதல்வர்

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (21:30 IST)
கரூரில் இதுவரை டெங்கு இல்லை என்றும் வந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ரெடி – கரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரோஸி வெண்ணிலா பேட்டியளித்துள்ளார்.
 

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் இல்லை என்றும் அப்படி வராமலும் இருக்க தீவிர எடுக்கப்பட்டு வருகிறது என்று கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையினை ஆய்வு மேற்க்கொண்ட பின்னர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்  ரோஸி  வெண்ணிலா  செய்தியாளர்கள் சந்திப்பில் தகவல்.

 
கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்க்கொண்டார். மருத்துவமனை யில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு சுமார் 100 நோயாளிகள் சாதாரண காய்ச்சலுக்கு வருகின்றனர் தற்போது 30 பேர் காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் இவர்களுக்கு போதுமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும், அவர்கள் யாருக்கும் இதுவரை  டெங்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும்,  இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரோஸி வெண்ணிலா.,  ஆண்கள்  மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக வார்டு உள்ளன. டெங்கு சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன  உரிய சிகிச்சை அளிக்க அனைத்தும் தயாராக உள்ளது என்றார்.

இனி வரும் மழைக்காலத்தில் எந்தவித காய்ச்சல் வந்தாலும் அதை தடுப்பதற்கு தேவையான மருந்துகள் போதுமான அளவில் இருப்பில் உள்ளது என்றார். அதே போல தீவிர சிகிச்சை கொடுக்க, தற்போதே தயாராக இருப்பதாகவும், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது 150 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளதாகவும், டெங்கு காய்ச்சல் வந்தால் கூட அவர்களுக்கு தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், காய்ச்சல் வராமலும், பரவாமலும் இருக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments