Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோ போதைப்பொருள்.. நோ திமுக.. ’X’ தளத்தில் எடப்பாடி பழனிசாமி

Mahendran
சனி, 9 மார்ச் 2024 (12:17 IST)
நோ போதைப்பொருள்.. நோ திமுக என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது  ’X’ தளத்தில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூரியிருப்பதாவது:
 
மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், போதைப்பொருள் மாபியா விவகாரத்தில் திமுகவின் நிர்வாகிகளே ஈடுபடுவதாக செய்திகள் வருகின்ற நிலையில், இந்த விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், வருகின்ற மார்ச் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அளவில் கழகத்தின் சார்பில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை இணைத்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற இருக்கின்றது
 
கழகத்தின் தொடர்ச்சியான  போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டங்களின் குறியீடாக, என்னுடைய  டிவிட்டர் “X” தளத்தின் முகப்பு பக்கத்தில்  "Say No To Drugs & DMK" என்ற வாசகத்தை இன்று இணைக்கிறேன்.
 
கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை அதிமுகவின்  போராட்டம் தொடரும்!
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

இறக்குமதிக்கு தடை.. கப்பலும் வரக்கூடாது. பாகிஸ்தானுக்கு அடுத்த செக் வைத்த இந்தியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments