தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலகநாடுகளுக்கு கொரொனா தொற்றுப் பரவியது.
இதையத்து கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் விரைவில் 3 வது அலை பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில்தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய புதிய வகை வைரஸ்க்கு ஒமிக்ரான் என்ற பெயரை உலக சுகாதார மையம் வைத்துள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட இதுவே வீரியமிக்க கொரோனா வகை என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு, ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழக மக்கள் நலவாழ்த்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: ஒமைக்ரான் அதிகமுள்ள நாடுகளில் இருந்து வருவொர் ஒருவாரம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பிற்ன்னே தான் அவர்கள் வெளியே அனுமதிக்கப்படுவார்கள் விமான நிலையங்களில் பரிசோதனைஉ செய்யப்படும் நிலையில், கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்