Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவை எவராலும் அழிக்க முடியாது; அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்

Webdunia
திங்கள், 15 ஜனவரி 2018 (12:18 IST)
ரஜினியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் ஆட்சி மாற்றம் வரும் என்று குருமூர்த்தி பேசியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். 
தமிழக அரசியலில் பா.ஜ.க.வும் ரஜினியும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என துக்ளக் இதழின் பத்திரிக்கை ஆசிரியரான ஆடிட்டர்  குருமூர்த்தி துக்ளக் ஆண்டு விழாவில் பேசியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் ரஜினியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் ஆட்சி மாற்றம் வரும் என்று குருமூர்த்தி கூறுவது அவரது கருத்து. ரஜினியுடன் பாஜக கூட்டணி வைத்தாலும் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும். தமிழக மக்கள் அம்மாவின் அரசுக்குதான் ஆதரவு தருவார்கள். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதிமுகவை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று அவர் கூறினார்
 
மேலும் மறைந்த எழுத்தாளர் ஞானி, இறுதியாக தனது முகநூல் பக்கத்தில் பாஜகவை வெளிப்படையாக ஆதரிக்கும் குருமூர்த்தி பற்றிய தனது கருத்தை வெளியிட்டுள்ளார். துக்ளக் ஆண்டு விழா வீடியோ கொஞ்ச நேரம் பார்த்தேன்.

குருமூர்த்தி பகிரங்கமாக பி.ஜே.பி நிலை எடுக்கிறார். சோ இவ்வளவு பகிரங்கமாக செய்ய மாட்டார். பி.ஜே.பியையும் லேசாக கிண்டல் செய்வார். குருமூர்த்தி முழுக்க முழுக்க பி.ஜே.பி சங்கப் பரிவாரத்தின் குரலாகவே ஒலிக்கிறார். இப்படி வெளிப்படையாக இருப்பது வரவேற்கத் தக்கது. முழுக்க அம்பலமானால்தான் மக்களுக்குப் புரியும் என்று ஞானி, இறுதியாக அவரது ஃபேஸ்புக் பக்கத்தில்  பதிவிட்டிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments