Publish Date: Tue, 30 Nov 2021 (14:49 IST)
Updated Date: Tue, 30 Nov 2021 (14:50 IST)
தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என்பதால் இனி பள்ளி கல்லூரிகளுக்கு அதிக விடுமுறை இருக்க வாய்ப்பு இல்லை என கூறப்பட்டு வருகிறது
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த மூன்று வாரங்களாக கனமழை பெய்து வந்தது என்பதும் அதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பின்னர் படிப்படியாக மழை குறைந்து விடும் என்றும் அதனால் இனி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது
சென்னையை பொறுத்தவரை மழை கிட்டத்தட்ட ஓய்ந்துவிட்டது என்பதும் தற்போது தோன்றியுள்ள நான்காவது காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழகத்தில் பெரிய மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது