Webdunia - Bharat's app for daily news and videos

Install App

22 ஆம் தேதி அரசுக் கழகப் பேருந்துகள் ஓடாது - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 20 மார்ச் 2020 (20:06 IST)
22 ஆம் தேதி அரசுக் கழகப் பேருந்துகள் ஓடாது - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவும் மெல்ல பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. நேற்று வரை 166 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 223  ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில்,கொரோனாவால் இன்று மட்டும் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்தம் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிறது.
 
இதனிடையே, இத்தாலியை சேர்ந்த 69 வயது முதியவர் ஒருவர் ராஜஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில் இந்த கொரோனா வைரஸில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமெனில் அனைவரும் வரும் 22 ஆம்தேதி வீட்டிலேயே இருக்கும் படி, சுய ஊரடங்கு உத்தரவை  பிரதமர் மோடி நேற்று அறிவுறுத்தியிருந்தார்.
 
இந்நிலையில், கொரோனாவை தடுக்க பிரதமர் கூறியபடி வரும் 22 ஆம் தேதி 9 அம்ச நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
 
இதுகுறித்து முதல்வர் கூறியுள்ளதாவது :
 
அரசுப் போக்குவரத்து கழகங்களின் பேருந்துகள் வரும் 22 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஓடாது என தெரிவித்துள்ளார். 
 
மேலும், வரும் ஞாயிறன்று காலை 7 மணி முதல்  இரவு 9 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது. தனியார் பேருந்துகள் இயங்கக் கூடாது. எனவே வரும் ஞாயிறன்று ,பிரதமர் மோடி கூறியுள்ளபடி, மக்கள் அனைவரும் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments