Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

காவிரியில் கரை புரண்டாலும் கரூர் வாய்க்காலில் நீர் இல்லை....

காவிரியில் கரை புரண்டாலும் கரூர் வாய்க்காலில் நீர் இல்லை....
, திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (17:49 IST)
காவிரி  ஆற்றில்  தண்ணீர்  கரைபுரண்டு  ஓடினாலும் கரூர்  மாவட்டத்தில்  உள்ள வாங்கல்  ராஜவாய்க்கால் ,  நெரூர்  ராஜவாய்க்கால் ஆகிய கால்வாய்களில்  தண்ணீர் வரவில்லை.
 
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கரூர் கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன், நேரில் கலந்து கொண்டு மனுவை மாவட்ட கலெக்டரிடம் கொடுத்தார். 
 
அந்த மனுவில், கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து   பா ம க சார்பில் தடுப்பணைகள்  கட்ட  தொடர்ந்து  வலியுறுத்தி  வந்தாலும் அரசு  நடவடிக்கை  எடுக்க  வில்லை என்றும், குடி மராமத்து செய்வதாக அறிவிப்புகள் வெளிவந்தாலும் வாய்க்கால் தூர் வாருவதும் முறையாக நடைபெறவில்லை. 
 
மேலும்., தற்போது அதனால்தான் காவிரி ஆற்றில் தண்ணீர் ஒரு லட்சம் கண அடிக்குமேல்  சென்றாலும் பாசனத்திற்கு பயன்படாமல் உள்ளது என்றும், எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கரூர் அடுத்த நெரூர், வாங்கல் ராஜ வாய்க்கால் ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்க செய்யவும், வாங்கல் ராஜவாய்க்கால் ஆகிய வாய்க்கால்களுக்கு தண்ணீர் கிடைக்க வலி செய்யவும், அதன்மூலம் அப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினை மற்றும் விவசாயிகளின் நீர் ஆதாரம் ஆகியவற்றை தீர்த்து வைக்க வேண்டுமென்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் பாமக சார்பில் அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் பி எம் கே பாஸ்கரன் தலைமையில் மணு கொடுக்கப்பட்டது.
 
பேட்டி : பி.எம்.கே.பாஸ்கரன் – மாநில துணை பொதுச்செயலாளர் – பாட்டாளி மக்கள் கட்சி
-சி.ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாட்டின் மிகப்பெரிய ஊழலில் அம்பானியுடன் மோடியும் கூட்டாளி; ராகுல் காந்தி குற்றச்சாட்டு