Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நுங்கம்பாக்கம் காவல்நிலையம் திடீரென மூடப்பட்டதால் பரபரப்பு! கொரோனா காரணமா?

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (11:36 IST)
நுங்கம்பாக்கம் காவல்நிலையம் திடீரென மூடப்பட்டதால் பரபரப்பு
தமிழகத்திலேயே மிக அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை மாவட்டம் உள்ளது என்பதும் சென்னையில் மட்டும் 570 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கவை. இந்த நிலையில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பொதுமக்களை மட்டுமின்றி காவல்துறை அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்று பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஒரு சில காவல் நிலையங்கள் மூடப்பட்டு தகவல் வெளிவந்தது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் இரண்டு காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு காவலர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவர்கள் இருவரிடமும் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
இரண்டு காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அதிரடியாக மூடப்பட்டது. கொரோனா பாதிப்பால் சென்னையின் முக்கிய பகுதியில் உள்ள நுங்கம்பாக்கம் காவல் நிலையம் மூடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments