Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாமிக்கு தடுப்பூசி ஆகாது! செவிலியர்கள் முன்பு சாமியாடிய மூதாட்டி!

Advertiesment
Tamilnadu
, வியாழன், 2 டிசம்பர் 2021 (13:26 IST)
புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டேன் என மூதாட்டி சாமியாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்த நிலையில் மாநிலங்கள்தோறும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 100 கோடி டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டிருந்தாலும் பலர் பயத்தால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமலும் இருந்து வருகின்றனர்.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவ பணியாளர்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பலரையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள செய்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் வயதான தம்பதிகளை செவிலியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அழைத்துள்ளனர். அதற்கு அவர்கள் மறுத்துள்ளனர். மேலும் அந்த மூதாட்டி திடீரென சாமியாடத் தொடங்கியதுடன் அங்காளத்தம்மனுக்கு தடுப்பூசி ஆகாது என கூறியுள்ளார். பின்னர் செவிலியர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வன்னியர் இடஒதுக்கீடு மேல்முறையீடு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை!